எமது வலைப்பதிவுகள்

 

கூகுள் க்ரோம் உலவியில் பாதுகாப்பு

News, • 1st May, 14 •

 

கூகுள் க்ரோம் தன்னுடைய உலவியில் பாதுகாப்பு காரணங்களுக்காக நீட்சிகளை (Extension / Addon) நிறுவுவதில் தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது. இனி நீங்கள் நீட்சிகளை உங்கள் க்ரோம் உலவியில் நிறுவ வேண்டும் என்றால் அது “Google Play Store” வழியாக மட்டுமே முடியும். முன்பு மற்ற தளங்களில் இருந்தும் கூட நிறுவ முடியும் ஆனால், இதன் மூலம் Malicious நீட்சிகளைத் தெரியாமல் நிறுவ வாய்ப்பு உள்ளது. உலவியில் மற்ற தளங்களை பார்வையிடும் போது நம் அனுமதி இல்லாமலே நமக்குத் தெரியாமலே கூட சில தளங்கள் நீட்சியை நிறுவி விடும்.

குறிப்பாக தேடல் தளங்கள் இது போல நீட்சிகளை நிறுவி முகப்புத் தளமாக தங்கள் தளத்தை நமது க்ரோம் உலவியில் மாற்றி விடும். நாம் க்ரோம் உலவியை திறந்தாலே முதலில் இவர்கள் தளம் தான் திறக்கும். இது பல பிரச்சனைகளை பயனாளர்களுக்கு கொண்டு வருகிறது என்பதால், கூகுள் இந்த முடிவு எடுத்து இருக்கிறது. இதன் மூலம் கூகுள் மற்றும் நம் அனுமதி இல்லாமல் யாரும் நம் உலவியில் நீட்சிகளை நிறுவ முடியாது. ஏற்கனவே இது போல நிறுவப்பட்டு இருந்தால், அவை தானியங்கியாக Deactivate ஆகி விடும் அதோடு உங்களால் திரும்ப Activate செய்ய முடியாது. இதன் மூலம் கூகுளால் அனுமதிக்கப்பட்ட நீட்சிகள் மட்டுமே நிறுவப்படும்.

கூகுளின் இந்த முடிவை நான் வரவேற்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம் உலவியின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. - கிரி

 

“இங்கு Google Glass க்கு அனுமதி இல்லை”

News, • 1st May, 14 •

 

கூகுள் கண்ணாடி வெளியிட்டு இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிந்து இருக்கும். இதன் மூலம் பல வசதிகளைப் பெற முடியும். இதை தற்போது பயன்பாட்டிற்கு / விற்பனைக்கு விட்டு இருக்கிறது. விலை 1500 USD. கண்ணாடி போடாமையே தலை கிர்ர் அடிக்குதா! எனக்கு இது பிடிக்கவில்லை.. இதனால் ப்ரைவசி மிகவும் பாதிக்கப்படுகிறது. யாரும் அறியாமலே எவரையும் இதன் மூலம் நிழல் படம் எடுக்க முடியும்.

நம்ம ஊருக்கு எல்லாம் வந்தால் பெரிய சிக்கல் ஆகி விடும். காஞ்சு போனவன் / இதே வேலையா இருக்கிறவன் எல்லாம் இதை வைத்து பெரிய தில்லாலங்கடி வேலைகள் செய்து விடுவார்கள். இதை குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்தத் தடை வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. உதாரணத்திற்கு “இங்கு Google Glass க்கு அனுமதி இல்லை” என்ற அறிவிப்புக் காணப்படலாம். - கிரி (Photo: AP)

 

இவங்க மனுசனே இல்லைங்க… தெய்வம்.

News, • 1st May, 14 •

 

இந்த ஜப்பான் காரங்க ஏதாவது செய்துட்டே இருக்காங்க..! அவங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லாம இருக்கு. தற்போது சுற்றுலா வரும் மக்களுக்காக ஒரு சூப்பர் டூப்பர் வசதியை செய்து இருக்கிறார்கள். அதாவது இனி ஜப்பான் செல்பவர்கள் முக்கிய இடங்களில் இலவச Wifi வசதியைப் பெறலாம். அதுவும் எப்படி…! உங்களோட கடவுச்சீட்டை (Passport) காட்டினால் போதுமானது. கலக்குறாங்கய்யா!!

இவங்க கனவில் கூட அடுத்த வசதியை எப்படி கொண்டு வரலாம் என்று யோசிப்பார்கள் என்று நினைக்கிறேன் grey இணைய தொழில்நுட்பச் செய்திகள் [09 06 2014] . 2020 ஒலிம்பிக் ஜப்பானில் நடக்கப் போகிறது அப்போது அனைவரும் மற்ற நாடுகளில் இருந்து வரும் போது என்னென்ன பண்ணப் போறாங்களோ! இவங்க மனுசனே இல்லைங்க… தெய்வம். - கிரி

 

Newer Posts >>

இணைப்புகள்